தென்காசி
கபடி போட்டி
|பாவூர்சத்திரம் அருகே கபடி போட்டி நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்- மீனாட்சிபுரம் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு வேங்கை கபடி குழு மற்றும் திப்-மீனாட்சிபுரம் ஊர் பொதுமக்கள் இணைந்து மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியினை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் வேங்கை அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.15 ஆயிரத்தை தட்டிச் சென்றனர். முதல் பரிசை பாலாஜி நயினார் நாகேந்திரன் நன்கொடையாக வழங்கினார்.
விழாவில் தொழில் அதிபர் விஜய் என்கிற சண்முக நயினார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத் தொகையினை வழங்கினார். விழாவில் தென்காசி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளர் சரவணமுருகன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் விவேக், பொன்னுதுரை, பொன் செல்வன், ஜெகன், பொன்னுசாமி, நாராயணன், ராமு, ராஜா மற்றும் திப்- மீனாட்சிபுரம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.