< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கபடி போட்டி
|8 Aug 2022 3:11 AM IST
திசையன்விளையில் அகில இந்திய மின்னொளி கபடி போட்டி- 11-ந் தேதி தொடங்குகிறது
திசையன்விளை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடக்கிறது. இந்த போட்டிகள் வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. 11-ந்் தேதி ஆண்கள் பிரிவு போட்டி தொடங்குகிறது.இந்த கபடி போட்டியை 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்பதற்கு வசதியாக காலரி வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்து உள்ளார்.