< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பெரம்பலூரில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கபடி, இறகுப்பந்து போட்டிகள்
|13 Feb 2023 12:00 AM IST
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கபடி, இறகுப்பந்து போட்டிகள் பெரம்பலூரில் இன்று நடக்கிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (திங்கட்கிழமை) பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கபடி, இறகுப்பந்து போட்டிகள் தனித்தனியாகவும், மாணவிகளுக்கான வாலிபால் போட்டியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வாலிபால் போட்டி தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து போட்டியும், நீச்சல் போட்டியும் நடைபெறவுள்ளது. பொது பிரிவினருக்கு வருகிற 25, 26-ந்தேதிகளிலும், அரசு ஊழியர்களுக்கு 27-ந்தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கு 28-ந்தேதியும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.