பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் - கி.வீரமணி வரவேற்பு
|பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டுவதற்கு கி.வீரமணி வரவேற்பு அளித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'தமிழன் என்றால் மொழி உணர்வு வரும் என்றும், திராவிடன் என்றால் மானமும், ரோஷமும் கூடுதலாக இருக்கும்' என்று பெரியார் திடல் நிகழ்ச்சியில் வெட்டு ஒன்று - துண்டு இரண்டாக அழுத்தமாகச் சொன்னவர் மறைந்த க.அன்பழகன். அவரின் வாழ்வும் அவர் தந்த கருத்தியல் விளக்கங்களும் நமக்குக் கலங்கரை வெளிச்சமாய் வழிகாட்டட்டும்.
அந்தவகையில் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை - பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு அவர் பெயர் சூட்டும் விழா அழைப்பிதழ் கிடைத்தது. பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் ஊரில் இல்லாமையால் இந்த அரும்பெரும் விழாவில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. எதையும் பொருத்தமாகவும், பொருளோடும் காலங்கருதி செய்யும் தங்களுடைய கடமை உணர்வு மிகவும் பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.