< Back
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

தினத்தந்தி
|
12 July 2024 9:12 AM IST

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23-ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜனாதிபதி உத்தரவின்படி சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் கடந்த மே 24-ந்தேதி ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் நேற்று கூடியது. இதில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனையும், ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங்கையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர்.மகாதேவனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பரிந்துரைத்துள்ள நிலையில், அவரது இடத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

மேலும் செய்திகள்