< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கான ஜூனியர் தடகள போட்டிகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கான ஜூனியர் தடகள போட்டிகள்

தினத்தந்தி
|
10 Sept 2023 12:15 AM IST

மாணவர்களுக்கான ஜூனியர் தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு ஜூனியர் தடகளப் போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்த தடகள போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 336 மாணவர்கள், 173 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமர மணிமாறன், மாவட்ட தடகளசங்க செயலாளர் சிவராஜ், பொருளாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்