< Back
மாநில செய்திகள்
மனைவியுடன் தகராறில்... 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

மனைவியுடன் தகராறில்... 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

தினத்தந்தி
|
24 Feb 2023 1:43 PM IST

சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள்.

லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை மனைவி கண்டித்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த லோகநாதன், வீட்டின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருவொற்றியூர் பூந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் செல்வா (29). வெல்டிங் தொழிலாளியான இவர், நிவேதா (25) என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு நிவேதா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் விரக்தி அடைந்த செல்வா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்