< Back
மாநில செய்திகள்
ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.1 சதவீதம் உயர்வு
விருதுநகர்
மாநில செய்திகள்

ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.1 சதவீதம் உயர்வு

தினத்தந்தி
|
5 Aug 2023 1:29 AM IST

கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ஏறக்குறைய 1.1 சதவீதம் உயர்ந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 105 கோடியாக அதிகரித்து உள்ளதாக பொருளியல்நிபுணர் தெரிவித்தார்.


கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ஏறக்குறைய 1.1 சதவீதம் உயர்ந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 105 கோடியாக அதிகரித்து உள்ளதாக பொருளியல்நிபுணர் தெரிவித்தார்.

வரி வசூல்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 35 கோடியாக இருந்த நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 550 கோடியாக இருந்தது. தற்போது மாதாந்திர வசூலாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டி. 15. 6 சதவீதம் உயர்ந்து ரூ.29ஆயிரத்து 773 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. 14.7 சதவீதம் அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 623 கோடியாகவும் உள்ள நிலையில் உள்நாட்டு பரிவர்த்தனைகள் வலுவான வளர்ச்சியை கண்டுள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு இடையேயான விற்பனை மற்றும் இறக்குமதியின் மீது விதிக்கப்படும் வரி சுமார் 8 சதவீத வளர்ச்சி அடைந்து வெளிநாட்டில் இருந்து வரும் ஏற்றுமதிக்கான வரியில் 0.4 சதவீதம் குறைந்துள்ளது.

நிலையான வளர்ச்சி

இதேபோல் இறக்குமதி மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான வரி விதிப்பு 15.6 சதவீதம் குறைந்து ரூ.840 கோடியாக உள்ளது. இது கடந்த பிப்ரவரியில் இருந்து தற்போது தான் மிக குறைவானதாகும்.

ஜி.எஸ்.டி.யில் நிலையான வளர்ச்சி என்பது முக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் நீண்ட கால நோக்குடன் முதலீடு செய்வதற்கும் காலப்போக்கில் வருவாய் அதிகரிப்பதற்கான அமைப்பை செம்மைப்படுத்துவதற்கும் ஒரு நிகழ்வாகும். இந்தியா மட்டும் தான் நிர்வாக செலவுகளை குறைப்பதோடு வரி வசூல் தொகையை அதிகரிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக கருத்து கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்