< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு
|18 Oct 2023 9:37 PM IST
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்க உள்ளார்.