< Back
மாநில செய்திகள்
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு-ஐகோர்ட்டில் நாளை  தீர்ப்பு
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு-ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு

தினத்தந்தி
|
1 Sept 2022 6:23 PM IST

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

சென்னை,

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், வக்கீல் நர்மதா சம்பத், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகினர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார்,து மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோர் ஆகியோர் வாதிட்டனர். இதைப்போல் பிற வக்கீல்களிலும் வாதம் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தீர்ப்பை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர்.

இதனால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்