கிருஷ்ணகிரி
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை;கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
|கிருஷ்ணகிரியில் மது குடிக்க பணம் தர மறுத்த உறவினர் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மது குடிக்க பணம் தர மறுத்த உறவினர் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
உறவினர் பெண்
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் ராணி (வயது 58). கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் 6-வது கிராசை சேர்ந்தவர் சுரேஷ் (56). இருவரும் உறவினர் ஆவர். இந்த நிலையில் மதுபோதைக்கு அடிமையான சுரேஷ் ராணியிடம் அவ்வப்போது பணம் வாங்கி மது குடிப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 9.11.2018 அன்று வீட்டில் இருந்த ராணியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு சுரேஷ் தகராறில் ஈடுபட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், ராணியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுரேசிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.