< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட நீதிபதிகள்
|6 Jun 2023 1:00 AM IST
கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் குடும்ப நல நீதிபதியும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான தனசேகரன் தலைமையில் அனைத்து நீதிபதிகளும் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் வக்கீல்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் வழக்கறிஞர் சங்க செயலாளர் சேகர், அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் மற்றும் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.