< Back
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம்
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம்

தினத்தந்தி
|
24 Sept 2024 4:10 PM IST

சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன், ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், பதிவாளராக எஸ்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி எஸ்.அல்லி செந்தில் பாலாஜி, ஜாபர் சாதிக் வழக்குகளை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்