சிவகங்கை
ஜே.பி.நட்டா இன்று காரைக்குடி வருகை
|பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வியாழக்கிழமை) காரைக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
காரைக்குடி,
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வியாழக்கிழமை) காரைக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
ஜே.பி.நட்டா வருகை
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பா.ஜனதா மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.
பொதுக்கூட்டம்
மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசுகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.45 மணிக்கு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மகாலில் பகல் 11 மணிக்கு பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி, பா.ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் ரவி, துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை பா.ஜனதா. சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.