ராமநாதபுரம்
கர்நாடக மாநில இளைஞர் வளர்ப்பு நாய்களுடன் பயணம்
|கர்நாடக மாநில இளைஞர் வளர்ப்பு நாய்களுடன் பயணம்
தனுஷ்கோடி,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அரவிந்த் என்ற இளைஞர் தனது பெண் நண்பருடன் வளர்ப்பு நாய்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர் லிங்க கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் மகாராஷ்டிரா மாநிலம், மத்திய பிரதேஷ், குஜராத், உத்தரகாண்ட், வாரணாசி பல மாநிலங்களில் உள்ள ஜோதிர்லிங்க கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கடைசியாக ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலிலும் தரிசனம் செய்ய வந்துள்ளோம். உடன் வளர்ப்பு நாய்களையும் அழைத்து வரவேண்டும் என ஆசைப்பட்டு அழைத்து வந்துள்ளேன். இந்த 3 மாதத்தில் 12 ஜோதிர்லிங்க கோவில்களையும் சேர்த்து சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.