ஈரோட்டில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு... போலீசாருடன் வாக்குவாதம்
|ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது வரை இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையும் தாமதமாகி உள்ளது.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால், செய்தியாளர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியாளருமான கிருண்னனுன்னி செய்தியாளர்களிடம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு காரணமாக செய்தியாளர்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றும் அடுத்த சுற்று அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.