< Back
மாநில செய்திகள்
ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் சேவை ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் சேவை ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Jun 2023 8:56 PM IST

பராமரிப்பு பணி காரணமாக ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே செய்திகுறிப்பில் கூறுவது.

பராமரிப்பு பணி காரணமாக, ஜோலார்பேட்டையில் இருந்து வரும் ஜூலை 3-ந்தேதி மதியம் 1.10 மணிக்கு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06411) சேவை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அதேநாள் காலை 6.25 மணிக்கு ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06412) ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, ஜூலை 7-ந் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து, கொல்லம் செல்லும் ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16823) கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான வேகத்தை விட கூடுதல் வேகத்தில் கொல்லம் வரை இயக்கப்படும்.

இதன் மூலம், பயணிகளுக்கு 5 நிமிடம் மிச்சம் ஆகும். இந்த ரெயில் எழும்பூரியில் இருந்து இரவு 8.10-க்கு புறப்பட்டு கொல்லம் ரெயில் நிலையத்தை 5 நிமிடம் முன்னதாக காலை 11.40 மணிக்கு சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்