கள்ளக்குறிச்சி
வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை இணை இயக்குனர் ஆய்வு
|தியாகதுருகம் பகுதியில் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை இணை இயக்குனர் ஆய்வு
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்த அவர் அரசு திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவருக்கு ரூ.42 ஆயிரம் மானியத்தில் சுழல்கலப்பையை வழங்கிய அவர் பிரிதிவிமங்கலம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, வேளாண்மை அலுவலர் வனிதா, துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன், உதவி விதை அலுவலர் மொட்டையாப்பிள்ளை, உதவி வேளாண்மை அலுவலர் துரைராஜ், இளநிலை உதவியாளர்கள் சங்கர், அருண்குமார் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.