நாமக்கல்
23 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்
|நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
23 சப்-இன்ஸ்பெக்டர்கள்
நாமக்கல், பள்ளிபாளையம், எருமப்பட்டி, நல்லிபாளையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணி இட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதா, பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கும் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.
பணி இட மாற்றம்
அதேபோல் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவிற்கும், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, வெப்படை போலீஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனிடையே ஆயில்பட்டியில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நாமகிரிப்பேட்டைக்கும், மங்களபுரத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி திம்மநாயக்கன்பட்டிக்கும், ஜேடர்பாளையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் பரமத்திவேலூருக்கும் என உள்பட23 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.