< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
|14 Oct 2022 2:49 AM IST
ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் பரவாசுதேவன். இந்தநிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக பரவாசுதேவன் சென்னை காவல்துறை தலைமை அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
ஜீயபுரம் உட்கோட்ட பொறுப்பை, திருச்சி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் கூடுதலாக கவனிப்பார். அதற்கான ஆணையினை நேற்று முன்தினம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.