< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்
|19 Feb 2023 10:10 AM IST
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். மயில்சாமியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மயில்சாமி மறைவுக்கு ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
"தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.