< Back
மாநில செய்திகள்
ஆவடியில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - இருவர் கைது
மாநில செய்திகள்

ஆவடியில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - இருவர் கைது

தினத்தந்தி
|
29 April 2024 11:55 AM IST

ஆவடியில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

திருவள்ளூர்,

ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி இவரது நகைக்கடைக்கு வந்த 4 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பிரகாஷை மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பையில், ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம், ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த விவகாரத்தில், 8 தனிப்படைகள் அமைத்து ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த தினேஷ்குமார், சேட்டன் ராம் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சென்னையில் தங்கியிருக்கும் நிலையில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை நெருங்கி விட்டதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்