சிவகங்கை
கத்தியை காட்டி மிரட்டி நகை, இருசக்கர வாகனம் பறிப்பு
|காளையார்கோவில் அருகே கத்தியை காட்டி மிரட்டி நகை, இருசக்கர வாகனம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே கத்தியை காட்டி மிரட்டி நகை, இருசக்கர வாகனம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருசக்கர வாகனம் பறிப்பு
காளையார்கோவில் அருகே குண்டாக்கொடை கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26) தனது உறவினர் சங்கர் கணேஷ் உடன் நேற்று முன்தினம் மாலை மறவமங்கலத்தில் இருந்து சூராணம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது உசிலங்குளம் பஸ் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத 4 பேர் கத்தியை காட்டி வழிமறித்து சங்கர் கணேஷ் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்கச் சங்கிலியையும் அஜித்குமார் பையில் இருந்த செல்போனையும் ஆயிரம் ரூபாயையும் பறித்தனர். அதோடு அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்து சென்றனர். அப்போது அவ்வழியே சென்ற அஜித்குமாரின் உறவினர் சித்திரவேலு இதனை பார்த்து தட்டி கேட்டார். உடனே அந்த கும்பல் அவரை பட்டாக் கத்தியால் முதுகில் வெட்டி அவரது செல்போனையும் பறித்துக் தப்பி விட்டனர்.
4 பேர் கைது
இதுகுறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக குண்டாக்குடை ஆறுமுகம் மகன் பிரபுதேவா (24), சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த சசிக்குமார் மகன் தனுஷ் குமார் (19), மறவமங்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் அய்யப்பன் (20), மறவமங்கலம் மேலத் தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் வினோத்குமார் (18) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.