< Back
மாநில செய்திகள்
மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் நகை திருட்டு
சேலம்
மாநில செய்திகள்

மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
14 Oct 2023 2:18 AM IST

சேலம் தாதகாப்பட்டியில் மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் திருட்டு போனது.

சேலம்

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 51). இவர் அந்த பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடை மனைவி மற்றும் மகன் பெருந்துறையில் வசித்து வருகின்றனர். மகள் அமெரிக்காவில் உள்ளார்.

சுகுமார் தனது தாயாருடன் தாதகாப்பட்டியில் உள்ளார். வீட்டு வேலைக்கு ஒரு பெண் உள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மருந்து கடைக்கு சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்த போது பீரோ திறந்து இருப்பதும் அதில் வைக்கப்பட்டு இருந்த 69 பவுன் நகைகள் திருட்டு போனதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை கண்டு பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்