< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
செஞ்சி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
|22 July 2023 12:15 AM IST
செஞ்சி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருடுப்போனது.
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள கோனை என்ற ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கணேசன்(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி கன்னிகா. நேற்று முன்தினம் மதியம் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
இதைபார்த்து அதிா்ச்சியடைந்த கணேசன், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 11 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரத்து 600 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து நகை பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.