< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
சேலத்தில் பஸ்சில் சென்ற போதுமுதியவரிடம் 15 பவுன் நகை அபேஸ்
|14 Oct 2023 1:54 AM IST
சேலத்தில் பஸ்சில் சென்ற போது முதியவரிடம் 15 பவுன் அபேஸ் செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 61). இவருடைய மகள் சேலம் குகை பகுதியில் உள்ளார். மகளை பார்ப்பதற்காக தனபால் மனைவியுடன் சேலம் வந்தார். பின்னர் ஓமலூர் செல்வதற்காக நேற்று குகையில் இருந்து பஸ்சில் ஏறினார். அப்போது அவர் 15 பவுன் நகையை ஒரு மணி பர்சில் போட்டு அதை பையில் வைத்து உள்ளார். பஸ் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தது. அப்போது பையை பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகையுடன் மணிப்பர்ஸ் அபேஸ் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் நகையை அபேஸ் செய்தவர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.