< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்
தர்மபுரி
மாநில செய்திகள்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்

தினத்தந்தி
|
2 Jun 2022 1:00 AM IST

தர்மபுரி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்யப்பட்டது.

தர்மபுரி:

தர்மபுரி அருகே தூதரையன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 67). இவர் செம்மாண்டகுப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு பஸ்சில் திரும்பினார். தூதரையன்கொட்டாய் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய போது அவருடைய கழுத்தில் இருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. மர்மநபர் ராஜம்மாள் அணிந்து இருந்து நகையை அபேஸ் செய்து இருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள், மதிகோன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகை பறித்தவர் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்