காஞ்சிபுரம்
ஒரகடம் அருகே கத்திமுனையில் பெண்ணிடம் நகை, செல்போன் பறிப்பு
|ஒரகடம் அருகே கத்திமுனையில பெண்ணிடம் நகை, செல்போன் பறிக்கப்பட்டது.
நகை- செல்போன் பறிப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 32). காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர்கள் இருவரும் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அடுத்த எறையூர் கூட்டு சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
திடீரென அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தி முனையில் உமா மகேஸ்வரி அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை கேட்டு மிரட்டி உள்ளனர். தர மறுக்கவே மணிகண்டன், மற்றும் உமா மகேஸ்வரி இருவரையும் கத்தியால் தாக்கியதோடு உமா மகேஸ்வரி அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் போன்றவற்றை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
மர்ம நபர்கள் தாக்கியதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இது குறித்து ஒரகடம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நகை, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
போலீசார் அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைதேடி வருகின்றனர்.