< Back
மாநில செய்திகள்
நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு
கடலூர்
மாநில செய்திகள்

நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு

தினத்தந்தி
|
20 Oct 2023 1:05 AM IST

நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருடு போனது.

நடுவீரப்பட்டு,

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையத்தை சேர்ந்தவர் மருதமலை முருகன் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நித்திய கல்யாணி (வயது 23). சம்பவத்தன்று நித்திய கல்யாணி, தனது வீட்டை பூட்டி சாவியை வீட்டின் வாசல் மேல் வைத்து விட்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

போலீசார் விசாரணை

பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. நித்தியகல்யாணி வீட்டை பூட்டி சாவியை வாசல் மேல் வைத்து சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்