< Back
மாநில செய்திகள்
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டு

தினத்தந்தி
|
13 Aug 2023 1:45 AM IST

பட்டிவீரன்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றனர்.

பட்டிவீரன்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 65). முன்னாள் ராணுவ வீரர். அவருடைய மனைவி வேணி. கடந்த 9-ந்தேதி கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு பூலத்தூரில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். நேற்று முன்தினம் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் கனகராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்