< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தினத்தந்தி
|
25 Oct 2023 7:48 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ளது யூனிட்டி நகர். இங்கு வசித்து வருபவர் திலீப்குமார் (வயது 43). இவர், கடந்த 20-ந்தேதி தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று வீட்டுக்கு அவர் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு தனியறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகைகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது வேற்காடு கிராமம். இங்கு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையையொட்டி லோகநாதன் (56) என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. நள்ளிரவில் கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 80 கிலோ எடை கொண்ட தாமிர கம்பிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்