< Back
மாநில செய்திகள்
சிதம்பரம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு

தினத்தந்தி
|
14 Sept 2023 12:15 AM IST

சிதம்பரம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை திருடு போனது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அருகே பெராம்பட்டு மடத்தான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி மல்லிகா (வயது 65). சம்பவத்தன்று இவரது வீட்டு கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 5 கிராம் நகை, 4 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை திருடிச்சென்றனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்