திருவள்ளூர்
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
|பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டது.
நகை திருட்டு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னவேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7½ பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.