< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
|29 Jan 2023 4:29 PM IST
மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் திருடப்பட்டது.
ரெயில்வே ஊழியர்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 44). மேல்மருவத்தூர் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வந்தவாசி அருகே உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டு நேற்று காலை திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை- பணம் திருட்டு
மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து ஜெகதீஷ் மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்து கொள்ளை நடைபெற்ற வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.