< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருட்டு
|10 Oct 2023 10:50 PM IST
செங்கம் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்
செங்கம் அருகே பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), செய்யாறு பகுதியில் உள்ள மின்வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
வெங்கடேசன் வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து செங்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.