< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 13 பவுன் நகை அபேஸ்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 13 பவுன் நகை அபேஸ்

தினத்தந்தி
|
9 July 2022 2:20 AM IST

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 13 பவுன் நகை அபேஸ்செய்யப்பட்டது.

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே உள்ள குதிரைப்பந்திவிளையை சேர்ந்தவர் பஞ்சுபழம். இவருடைய மனைவி சுந்தரபாய் (வயது 68). சம்பவத்தன்று இவர் லட்சுமிபுரம் அம்மச்சிமடம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

பின்னர், கோவில் வழிபாடுகளை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்புவதற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இரணியல் அருகே பரசேரி பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கியபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து சுந்தரபாய் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இரணியல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் விசாரணை நடத்தி நகை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடிவருகிறார்.ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 13 பவுன் நகையை மர்ம நபர் அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்