< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு
|23 Jun 2023 12:15 AM IST
100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறித்தனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காயாம்பு. இவருடைய மனைவி சேது (வயது 65). இவர் சொக்கலாம்பட்டியில் இருந்து மாத்தூருக்கு 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வணங்காமுடிபட்டி சாலையில் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் சேது அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பிஓடிய 2 ஆசாமிகளை தேடி வருகின்றனர்.