< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு
|22 April 2023 8:17 AM IST
அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ.80.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கம் விலை மாற்றபடும் நிலையில் இன்று காலை 7.29 மணிக்கே மாற்றப்பட்டுள்ளது.
தங்கத்தின் விற்பனையை அதிகரிக்க நகைக்கடைகளை முன்கூட்டியே திறந்து வைத்து உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.