< Back
மாநில செய்திகள்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு..!!

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு..!!

தினத்தந்தி
|
22 Oct 2022 5:36 AM GMT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்த சூழலில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் தங்களுக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,740க்கு விற்பனை ஆகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நகை வாங்குவது அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 உயர்ந்து ரூ.63.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்