< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ஒட்டியம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டில் நகை-பணம் திருட்டு - வாலிபர் கைது
|5 March 2023 1:18 PM IST
ஒட்டியம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி யமுனா பாய். இவர், உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். இவரை வீட்டில் இருந்து கவனித்து கொள்வதற்காக தனியார் ஏஜென்சி மூலம் சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த மதியழகன் (வயது 23) என்பவரை வேலைக்கு சேர்த்தனர்.
கடந்த சில நாட்களாக மதியழகன் சரிவர வேலைக்கு வரவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது தங்க மோதிரங்கள், சங்கிலி என 5 பவுன் நகைகள், பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பெரும்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்தனர். விசாரணையில் மூதாட்டி வீட்டில் இருந்து 5 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரத்தை திருடியது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.