< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருநின்றவூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
|13 Aug 2023 9:15 PM IST
திருநின்றவூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஆவடி அடுத்த திருநின்றவூர் ஜி.ஆர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). இவர் பெரியபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 8-ந்தேதி வீட்டை பூட்விட்டு சொந்த ஊரான திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார்.பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சரவணன் திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.