கன்னியாகுமரி
மூதாட்டியிடம் 8 பவுன் நகை, பணம் அபேஸ்
|குளச்சல் அருகே மூதாட்டியிடம் 8 பவுன் நகை மற்றும் பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் அருகே மூதாட்டியிடம் 8 பவுன் நகை மற்றும் பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை-பணம் அபேஸ்
குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம் மில்லிவிளையை சேர்ந்தவர் ராஜையன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 60), செம்பொன்விளையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் தனியாக இருக்கும் போது சுமார் 53 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடிக்கடி வந்து பேசி செல்வது வழக்கம். அதே போல் 1.9.22 அன்று அந்த பெண் கடைக்கு வந்து, உங்கள் மகனுக்கு பெண் பார்த்து உள்ளேன். எனவே சாமி படத்தின் முன் 8 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை வைக்குமாறும் கூறியுள்ளார். அதன்படி சரஸ்வதி நகை, பணத்தை சாமி படத்தின்முன் வைத்தார். சிறிது நேரம் கழித்த பார்த்த போது நகை மற்றும் பணத்தை காணவில்ல. அதன்பிறகு அந்த பெண் கடைக்கு வருவதை நிறுத்தி விட்டார். எனவே அவர் தான் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்து சென்றுள்ளார் என்று சரஸ்வதி கருதினார்.
போலீஸ் விசாரணை
அதைத்தொடர்ந்து அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.
---