< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
|14 Sept 2022 9:39 PM IST
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் மர்மநபர்கள் நகை பறித்துவிட்டு தப்பி ஓடினர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் மாயக்காள் (வயது 70). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை மாயக்காள் தனது வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், மாயக்காள் வீட்டின் கதவை தட்டினர். இதனால் கண்முழித்த அவர் கதவை திறந்த பார்த்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மாயக்காள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து மாயக்காள், ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.