< Back
மாநில செய்திகள்

தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரியில்ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

26 Sept 2023 1:00 AM IST
தர்மபுரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி சோகத்தூர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா (வயது 50). இவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனது உறவினரை பார்ப்பதற்காக தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சென்றார். அரசு ஆஸ்பத்திரி அருகே பஸ் சிலிருந்து இறங்கினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகை மயமாகி இருந்தது. பஸ்சில் சென்ற போது மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.