< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
பெண்ணிடம் நகை பறிப்பு
|30 Jun 2023 12:30 AM IST
பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்தில் வசிக்கும் வீரபாண்டி என்பவரது மனைவி நாகவள்ளி (வயது 57). இந்த நிலையில் நேற்று அதிகாலை நாகவள்ளி வீட்டுக்கு வெளியே வந்த போது அடையாளம் தெரியாத 2 பேர் இருந்துள்ளனர். இதை பார்த்து சத்தம் போட்டு உள்ளார். உடனே அந்த நபர்கள் நாகவள்ளி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து சாலைக்கிராமம் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.