< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
|22 March 2023 1:31 PM IST
புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சூளையை சேர்ந்தவர் ருத்திரவாணி (வயது 20). இவர் புரசைவாக்கத்தில், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு மூக்காத்தாள் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ருத்திரவாணி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்துச் சென்றுவிட்டார்.
இது குறித்து வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ருத்திரவாணியிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபர் வினோத்குமார் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். நகை மீட்கப்பட்டது. தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டுத் தெரிவித்தார்.