< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
திண்டிவனம் அருகேவீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|23 Dec 2022 12:15 AM IST
திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த கொள்ளார் பள்ளத் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் பாக்யராஜ் (வயது 32). இவர் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 13-ந் தேதி சென்னைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாக்யராஜ் வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் அளித்தனர். உடனே பதறிபோன பாக்யராஜ் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இ்ல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பாக்யராஜ் அளித்த புகாரின் போில், ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.