கடலூர்
பண்ருட்டியில் துணிகரம்ஸ்டூடியோ ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|பண்ருட்டியில் ஸ்டூடியோ ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பண்ருட்டி,
ஸ்டூடியோ ஊழியர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அப்பாவு பத்தர் தெருவை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 40). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோ மற்றும் கலர் லேப்பில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜாராம் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் ஒருவா் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜாராம் வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.
நகை-பணம் கொள்ளை
பின்னர் அவர்கள், படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.5 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று காலை வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் இதுபற்றி ராஜாராமுக்கும், பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை அறிந்து பண்ருட்டி திரும்பிய ராஜாராம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.