விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே அடகு கடைக்காரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை போலீசார் விசாரணை
|திருவெண்ணெய்நல்லூர் அருகே அடகு கடைக்காரர் வீட்டில் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 61), இவர் கோபாலபுரத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு தனது அடகு கடைக்கு சென்றுவிட்டு சாப்பிடுவதற்காக மீண்டும் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிமூலம் உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது, அதில், வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. ஆதிமூலம் அடகுக்கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.