< Back
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
திருச்சி
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

தினத்தந்தி
|
9 Jan 2023 2:30 AM IST

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டுபோனது.

துறையூர்:

துறையூரில் தீரன் நகரில் வசிப்பவர் நாகராஜன்(வயது 70). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி தனலட்சுமி. சம்பவத்தன்று மதியம் தனலட்சுமி வெளியே சென்றுவிட்டார். நாகராஜன் வீட்டை பூட்டி விட்டு துறையூர் பஸ் நிலையம் சென்றார்.

பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 4½ பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் அங்கு திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்